தொடர்ச்சியாக ஏற்றுமதியாகும் ரஷ்ய எரிபொருட்கள்! தன் பேச்சை தானே கேட்காத ஐரோப்பா!!

You are currently viewing தொடர்ச்சியாக ஏற்றுமதியாகும் ரஷ்ய எரிபொருட்கள்! தன் பேச்சை தானே கேட்காத ஐரோப்பா!!

ரஷ்ய – உக்ரைன் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில், அமெரிக்காவும், மேற்குலகமும் ரஷ்யாமீது விதித்திருந்த பொருளாதாரத்தடைகளையும் மீறி, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பா எண்ணெய் கொள்வனவை தொடர்ந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஒருவருட காலத்தில், ரஷ்யாவை எதிர்ப்பதற்காக உக்ரைனுக்கு பல பில்லியன் டொலர்கள் பணத்தை அள்ளிவழங்கிய ஐரோப்பா, உக்ரைனுக்கு வழங்கிய பொருளாதார உதவிகளை விடவும் அதிகளவிலான பெறுமதிக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்துள்ளதாக கணக்கெடுப்புக்கள் காட்டுவதாகவும் மேலும் குறிப்பிடப்படுகிறது. ரஷ்யாவிலிருந்து நேரடியாக தருவிக்கப்படாமல், உக்ரைன் ஊடாக ரஷ்ய எண்ணை ஐரோப்பாவுக்குள் கொண்டுவரப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தை தளமாகக்கொண்ட “Centre for Research on Energy and Clean Air (CREA)” எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளில் இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாமீது பொருளாதாரத்தடைகளை விதித்த ஐரோப்பா, எப்படியாயினும் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவிலேயே இன்றும் தங்கியுள்ளதை இவ்விடயம் எடுத்துக்காட்டுகிறது என்பதோடு, முழு ஐரோப்பாவுக்குமான எரிவாயுத்தேவையின் 40 சதவிகிதத்தை ரஷ்யாவே வழங்கி வந்தமையும் நினைவுகூரத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவநடவடிக்கைகளை தொடர்ந்து, ரஷ்யாமீது அமெரிக்காவும், மேற்குலகமும் கடுமையான பொருளாதாரத்தடைகளை விதித்திருந்ததோடு, ரஷ்யாவிடமிருந்து அனைத்து இறக்குமதிகளுக்கும் தடைகளை விதித்திருப்பதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், கடந்த ஒரு வருடத்தில் ரஷ்யா ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த நிலக்கரி, எண்ணெய், எரிவாயு வாயிலாக 295 பில்லியன் எயூரோக்களை ரஷ்யா சம்பாதித்துள்ளதாகவும் மேற்படி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தொகையில் சுமார் 140 பில்லியன் எயூரோக்கள் பெறுமதியான எரிபொருட்களை ஐரோப்பிய ஒன்றியம் கொள்வனவு செய்துள்ளதாகவும் மேலும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

தொடர்ச்சியாக ஏற்றுமதியாகும் ரஷ்ய எரிபொருட்கள்! தன் பேச்சை தானே கேட்காத ஐரோப்பா!! 1

ஒருபுறத்தில் ரஷ்யாமீது பொருளாதாரத்தடைகள் விதிப்பதோடு, ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளிவழங்கும் மேற்குலகம், மறுபுறத்தில் தாமே வித்தித்தடடைகளையும் மீறி எரிபொருட்களை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதை மேற்படி விடயம் வெளிக்காட்டியுள்ளது.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply