இன்று இரவு 8 மணி தொடக்கம் நாடு முழுவதும் தொடர்ந்து மூன்று நாட்கள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது 21 மாவட்டங்களில், ஊரடங்குச் சட்டம் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. நாளை வெள்ளிக்கிழமை வரை இந்த நடைமுறை இருக்கும் என்று முன்னதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
எனினும், 21 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு அமுலுக்கு கொண்டு வரப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும், மே 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்று மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.