“கொரோனா” பரவல் தீவிரமடைந்துள்ளதால், தொற்றுத்தடுப்பு உபகரணங்களை வைத்திருப்பவர்கள், அவற்றை தந்துதவுமாறு ஒஸ்லோ நகரசபை தலைவர் “Raymond Johansen” மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதிலும் நிலவிவரும் மேற்படி உபகாரணங்களுக்கான பற்றாக்குறையை அடுத்தே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ தேவைகளுக்காக பாவிக்கக்கூடிய வாய்க்கவசங்கள் (Munnbind), தொற்றுத்தடுப்பு ஆடைகள் (Smittefrakk), கையுறைகள் (Engangs hansker), கண்ணாடிகள் (Vernebriller) போன்ற உபகரணங்களை வைத்திருப்பவர்கள், ஒஸ்லோ நகரசபை நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு, அவற்றை கொடுத்துதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒஸ்லோ நகரசபை நிர்வாகம் மட்டுமல்லாது, நாட்டின் ஏனைய பாகங்களிலுமுள்ள நகரசபை நிர்வாகங்களும், அந்தந்தப்பகுதிகளிலுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இதே கோரிக்கையை விடுத்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.