தொலைபேசி பாவனையை தாய் கண்டித்ததால் காணாமல் போன சிறுவன்!!

You are currently viewing தொலைபேசி பாவனையை தாய் கண்டித்ததால் காணாமல் போன சிறுவன்!!

வவுனியாவில் 4 நாட்களாக சிறுவனை காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வவுனியா பொன்னாவரசங்குளம் பிரதான வீதியை சேர்ந்த 16 வயதுடைய லிங்கேஸ்வரன் தருஜன் எனும் சிறுவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என பெற்றோரால் சிறீலங்கா காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

குறித்த சிறுவன் வீட்டில் தொடர்ச்சியாக தொலைபேசியை உபயோகித்து இருந்ததை அவதானித்த தாயார் அது தொடர்பில் கண்டித்திருந்தார் என்று பெற்றோர் தெரிவித்துள்ள நிலையில் தாயின் கண்டிப்பினால் ஏற்பட்ட விரக்தியால் சிறுவன் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.   அதனை தொடர்ந்து சிறுவன் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்

சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள அதே நேரம்  குறித்த சிறுவனை யாரேனும் பொது மக்கள்  அடையாளம் காண்டால் உடனடியாக 0773751064 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply