சீனாவில் இதுவரை காலமும் அமுலிலிருந்த “இரு குழந்தைகள் மட்டும்” சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டு, ஒரு தம்பதியினர் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வயதானவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்துவரும் அதேவேளை, இளவயதினர் குறைவாகவும் உள்ளதால், மக்களின் சமப்படுத்தலை சீர்செய்வதற்காக சட்டவிதிகளில் இளக்கம் செய்யவேண்டியுள்ளதாக சீன அரசதரப்பு தெரிவிக்கிறது. 2015 வரையும் “ஒரு குழந்தை மட்டும்” என்றிருந்த சட்டம், பின்னாளில் “இரு குழந்தைகள் மட்டும்” என மாற்றப்பட்டிருந்ததோடு இப்போது “மூன்று குழந்தைகள்” என சட்ட மாற்றம் செய்துள்ள சீன அரசு, குழந்தைகளை பெற்றுக்கொள்வோருக்கான உதவித்திட்டங்களையும் அறிவிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனினும், இளம் சீனத்தம்பதிகளிடையே, “நாம் இருவர், நமக்கு ஒருவர்” என்ற மனப்பான்மையே மேலோங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.