நம்பிக்கையில்லா பிரேரணை- முன்னணி எம்.பிக்கள் கைச்சாத்து! 

You are currently viewing நம்பிக்கையில்லா பிரேரணை- முன்னணி எம்.பிக்கள் கைச்சாத்து! 

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராச கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்தே இவர்கள் ஆதரவாக கையொப்பம் இட்டுள்ளனர்.

இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதிதுப்படுத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கலந்து கொண்டார். இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கையொப்பமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லா பிரேரணை- முன்னணி எம்.பிக்கள் கைச்சாத்து!  1
நம்பிக்கையில்லா பிரேரணை- முன்னணி எம்.பிக்கள் கைச்சாத்து!  2

இதேவேளை

ஆட்சியை கவிழ்க்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, தானும் ஆட்சியை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கை சரித்திரத்தில் முதல் தடவையாக கோட்டாபயவும் அவர் சார்ந்த அரசாங்கமும் பௌத்த சிங்கள ஆட்சி என்பதை முன்னிலைப்படுத்தி அதை வைத்து சொந்தம் கொண்டாடி, தனி சிங்கள மக்களின் நலன்களை மட்டுமே கருதி உத்தியோகபூர்வமாக செயற்பட்டு வந்தமை தமிழ் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாகவும் தெரிவித்திருந்தார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply