தியாக தீபம் லெப். கேணல் தீலீபன் அவர்களின் 37 ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்கள் நடைபெற்று வருகிறது.தாயகத்தில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விடுதலை உணர்வை மக்களுக்கு எடுத்தியம்பிய வண்ணம் பயணித்துகொண்டுள்ளது
தமிழீழ மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தி, மலர்வணக்கம் செலுத்திவருகின்றனர்.
இந்நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.









