நள்ளிரவு வரை ஏ-9 வீதியில் பதற்றம் – அதிரடிப்படையினர், இராணுவம் குவிப்பு!

You are currently viewing நள்ளிரவு வரை ஏ-9 வீதியில் பதற்றம் – அதிரடிப்படையினர், இராணுவம் குவிப்பு!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் விபத்தில் மரணித்த இளைஞனுக்கு நீதிக்கோரி ஏ9 வீதியை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் மரணித்த முச்சக்கர வண்டி சாரதியான இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து நேற்றிரவு 10.00 மணியளவில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா, ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் பிக்கப் ரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ரஜீபன் (வயது 32) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

விபத்துக்குள்ளாகிய வாகனத்தை ஏற்ற விடாது வாகனத்தை முற்றுகையிட்டும், ஏ9 வீதியை மறித்தும் மரணித்த இளைஞரின் உறவினர்கள், நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போக சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஏ9 வீதியை மறித்து போராடியவர்களை அகற்றிய விசேட அதிரடிப்படையினர் குழப்பம் விளைவித்ததாக பலரை கைது செய்து எச்சரிக்கையின் பின்னர் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

அத்துடன், நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். மக்களது போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை எடுத்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன், முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.

இதன்போது,சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன், மரணித்த இளைஞனுக்கு நீதி கிடைக்கும் எனவும்,சரியான முறையில் விசாரணை இடம்பெறும் எனவும் குறித்த இளைஞனின் தாயார் மற்றும் உறவினர்களுக்கு வாக்குறுதி அளித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போராட்டத்தை கைவிடுமாறு கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து இரவு 11.50 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து விபத்துக்குள்ளாகிய வாகனம் பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நள்ளிரவு வரை ஏ-9 வீதியில் பதற்றம் - அதிரடிப்படையினர், இராணுவம் குவிப்பு! 1
நள்ளிரவு வரை ஏ-9 வீதியில் பதற்றம் - அதிரடிப்படையினர், இராணுவம் குவிப்பு! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments