நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை நாட்டின் அதியுச்ச அடக்குமுறை: பா.அரியநேத்திரன்

You are currently viewing நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை நாட்டின் அதியுச்ச அடக்குமுறை: பா.அரியநேத்திரன்

யாழ். மருதங்கேணிப் பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை நாட்டின் அதியுச்ச அடக்குமுறைஇ இது கண்டிக்க வேண்டியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஊடக செயலாளருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்இ தமிழ் தேசிய அரசியலில் ஈடுபடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து கொலை செய்த வரலாறுகள் கடந்த 2009 மே18 க்கு முன்னர் அதிபயங்கரமாக காணப்பட்டது.

2004 தொடக்கம் 2008 வரை மட்டக்களப்பு – ஜோசப் பரராசசிங்கம், யாழ்ப்பாணம் – ரவிராஜ், சிவநேசன், கொழும்பு – மகேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்த போதே கொலை செய்யப்பட்டனர்.

மேலும் அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

2004 இல் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் தெரிவாகியும் அவர்கள் சுதந்திரமாக வடக்கு கிழக்கில் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாது கொழும்பில் முடக்கப்பட்ட வரலாறுகள் உண்டு.

ஆனால் இப்போது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்ற பின்னர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லாத சூழ்நிலை காணப்பட்ட போது, திடீரென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மீது துப்பாக்கி நீட்டப்பட்ட சம்பவம் பாரிய சம்பவமாகவே பார்க்க வேண்டும்.

ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவருடைய சொந்த மாவட்டத்தில் சுதந்திரமாக தமது அரசியல் பணியை செய்வதற்கு அச்சுறுத்தலை இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்டிருப்பதுஇ ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டும்.

எனவே இதற்கான பின்னணி? யார் இதற்கு பொறுப்பு? என்பவற்றை கண்டறிந்து சட்டத்தின் முன் அவர்கள் நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை சர்வதேச சமூகம் இலங்கை அரசின் அடாவடிதனத்தை கண்டிக்க வேண்டும்.

இந்த நாட்டின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply