நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது ஆப்கானிஸ்தான் அரசாங்கம்!

You are currently viewing நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது ஆப்கானிஸ்தான் அரசாங்கம்!

தலிபான்கள் நகரங்களுக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

தலைநகர் காபூல் மற்றும் இரண்டு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச துருப்புக்கள் நாட்டிலிருந்து விலகுவதால் கடந்த இரண்டு மாதங்களாக தலிபான் மற்றும் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு இடையிலான மோதல் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா துருப்புக்களை திரும்பப் பெற்றதும், எல்லைக் கடப்புகளையும், கிராமப்புறங்களில் உள்ள பிற பிரதேசங்களையும் குறித்த போராளிகள் குழு கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் வன்முறையைத் தடுப்பதற்கும், தலிபான் இயக்கங்களை மட்டுப்படுத்துவதற்கும் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தலிபான்கள் தொடர்ந்து முன்னேறி வருவதால், இந்த வாரம் காந்தஹார் நகரின் புறநகரில் கடுமையான மோதல் இடம்பெற்றது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா வியாழக்கிழமை அப்பகுதியில் போராளி நிலைகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply