நான் ஓர் அகதி…
ஏன் புலம் பெயர்ந்தோம்
என்ற எண்ணமே
மனக்கூட்டில் மறைந்துபோன
மாந்தரே அதிகம்!
புளகாகிதத்தோடும்
பூரிப்போடும்
அ எழுதிய மண்ணில்
அரக்கரின் வெறித்தனம்
புலத்திலே உயிர்களை
புசித்துண்ணும் போதினிலே
மேதினியெங்கும்
உயிர் பிச்சை கேட்டு
சொந்த நிலத்தை விட்டு
புலம் பெயர்ந்தோம்!
அவலம் தந்தவனை
அவன் மொழியில்
அண்ணன் பிள்ளைகள்
அணைபோட்டுக் காக்க
விண்ணைத்தாண்டி
கண்டம் விட்டு கண்டம் விட்டு
அந்நிய மண்ணியில்
அகதியாய்
விண்ணப்பபடிவம்
நிரப்பினோம்!
கூடவே மண்னுக்காய் போராடுபவர்களையும்
மனிதமற்றவர்களாய்
கையெழுத்தும் இட்டோம்!
மாறாக
நாங்களே எங்களை பயங்கரவாதிகளாய்
மேற்கத்தேயவர்களால்
ஆக்கிக்கொண்டோம்!
ஏன்
இதை செய்தோமென்றால்
வதிவிட அனுமதியென்ற
ஒற்றை சுயநலத்திற்காக
மட்டும்தான்!
இங்கே இனத்தின் எதிர்காலம்
சார்ந்து பொது கரிசனை
செத்துப்போய் கிடந்தது!
இன்னொரு
பக்கத்தில் விடுதலைவீரர்களின்
கேடயமாய்
தார்மீக ஆதரவு கொண்ட மக்களால்
முப்படை கட்ட முதுகெலும்பாய்
செயலாற்றவும் முடிந்தது!
வேதனை என்னவென்றால்
சாதனை நிகழ்த்த தோள்கொடுத்தோர்
கொத்துக்கொத்தாய்
சாவு கண்டதும்
பாதை மாறி ஓடியே போயினர்!
வீரவசனங்களும்
கோசங்களும்
எழுச்சியாய் நின்ற
எழுது கோல்களும்
முதுகு முறிந்து
சுயநலப்போதையேறி
புலித்தோலை கழற்றி
புலிநீக்க அரியலில்
புடம் போடும் துரோகமே
நடக்கிறது!
இங்கும்
சுயநலமும்
பாதை மாறிய பாதங்களுமே
எங்கள்
விடுதலையை பயணத்தை
சோரம் போகச் செய்கின்றது!
ஆகவே
புலம்பெயர்ந்த சர்வதேச
தமிழ் அகதிகளின்
சுயநலப்போதை
தங்கள் அடையாளத்தை
தொலைத்து ஆடும்வரை
கயமைகளே காலில் சுற்றி
இறமையை அழிக்கும்!
✍️தூயவன்