கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர்தொழில்நுட்ப அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் திறந்திருக்கும் என்றும் உணவகங்களில் பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்க அனுமதி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்