நாளை முதல் காலி முகத்திடலில் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு தடை!

You are currently viewing நாளை முதல் காலி முகத்திடலில் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு தடை!

கொழும்பு – காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள் , இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்காக அனுமதி வழங்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் வியாழக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சமூகப் பொறுப்பு நிதி கருத்திட்டமாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக குறித்த அதிகாரசபை 220 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

கடந்த போராட்ட காலங்களில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களைப் புதுப்பிப்பதற்காக மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுதந்திரமாகப் பொழுதைக் கழிப்பதற்கு இயலுமாகும் வகையில் இத்திடலைப் பயன்படுத்த வேண்டியிருப்பினும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடும் வேறு பல செயற்பாடுகளால் இத்திடல் தொடர்ந்து சேதமடைவதுடன், இச்சுற்றுச்சூழலின் அழகையும், எழில் மிகுந்த தோற்றத்தையும் பேணிச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த, காலிமுகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply