நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த ஐவர், மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 33 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 33 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 210 இல் இருந்து ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது.
மே-17 ஆம் திகதி தொடக்கம் மே-24 வரையான நாட்களில் இவ்வாறு 33 பேர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே-17 ஆம் திகதி – ஒருவர்
மே-19 ஆம் திகதி – 03 பேர்
மே-20 ஆம் திகதி – 02 பேர்
மே-21 ஆம் திகதி – 04 பேர்
மே-22 ஆம் திகதி – 10 பேர்
மே-23 ஆம் திகதி – 08 பேர்
மே-24 ஆம் திகதி – 05 பேர்
என குறித்த காலப்பகுதியில் 33 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரும், நாவலப்பிட்டியைச் சேர்சந்த ஐவரும் உள்ளடங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட சுவாசத் தொகுதி தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே மாதம் 19 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே மாதம் 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 19 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 55 வயதுடைய பெண் ஒருவர், நாலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அதிகூடிய வயதில் கொரோனாவுக்கு உயிரிழந்த இலங்கையரது மரணமும் நேற்றைய கொவிட் மரங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி மாவட்டம், கினிமெல்லகஹ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 104 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.