நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இனப்படுகொலையாளி கோட்டாபய தாய்லாந்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு தனது மனைவியுடன் சென்றுள்ளார்.இந்த நிலையிலேயே தாய்லாந்து பிரதமர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வரும் கோட்டாபய ராஜபக்ச, நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அரசியல் செயற்பாடுகள் எதனையும் செய்ய மாட்டேன் என உறுதியளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. நாங்கள் தற்காலிகமாக தங்குவதற்கு உறுதியளித்தோம். அரசியல் நடவடிக்கைக்கு அனுமதி இல்லை.வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார்” என அவர் மேலும் தெரிவித்தார்.