தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 24-09-2023 Fickling Convention Centre,
Three Kings மண்டபத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. South Auckland பிராந்திய, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இன்நிகழ்வில் பொதுச்சுடர், தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வெழுச்சி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள், மாணவர்கள், நியூசிலாந்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

நடனம், கவிதைகள், சிறப்புரைகள் இடம் பெற்றன. இறுதியாக நிகழ்வாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் பாடப்பட்டதை தொடர்ந்து “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் மக்களின் ஒருங்கிணைந்த எழுச்சியுடன் நிறைவு பெற்றது.
























