அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் காணொளி அழைப்பு மூலம் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்து ஆளுநர் “Andrew Cuomo” உத்தரவிட்டுள்ளார்.
“ZOOM” செயலி மூலம் திருமணத்தை நடத்தி, திருமணச் சான்றிதழ் பெறும் வகையில் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணொளி அழைப்பு மூலம் உறவினர்களை அழைத்து எளிமையான முறையில் சில திருமணங்கள் நடந்துள்ளன.