நிலவில் அணு உலையை நிறுவ ரஷ்யா – சீனா கூட்டுத்திட்டம்!

You are currently viewing நிலவில் அணு உலையை நிறுவ ரஷ்யா – சீனா கூட்டுத்திட்டம்!

நிலவின் மேற்பரப்பில் அணு உலையை அமைக்க ரஷ்யாவும், சீனாவும் விருப்பம் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், 2033 -2035 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சந்திரனில் அணுஉலை அமைப்பதற்கு இவ்விரு நாடுகளும் விரும்புவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொஸ்கொஸ்மோஸின் தலைவர் யூரி பொரிசோவ் தெரிவித்துள்ளார். நிலவின் மேற்பரப்பில் அணு உலையை அமைக்க இருநாடுகளும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தன.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியை தற்போது இரு நாடுகளும் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

நிலவு குறித்த ஆய்வுகள் ஆரம்பத்தில் தீவிரமடைந்திருந்தது. எனினும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த ஆய்வுகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இதன்படி அணு உலை கட்டுமானங்களை உருவாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

பூமியை போல நிலவில் சோலார் தகடுகளை அமைத்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் அவை நமக்கு போதுமானதாக இருக்காது, ஆகவே அணு உலையை கட்ட தீர்மானித்திருக்கிறோம்.

இந்த அணு உலையை எப்படி குளிர்விப்பது என்பதை தவிர மற்ற அனைத்து கேள்விகளுக்கும் நம்மிடம் விடை இருக்கிறது” என யூரி பொரிசோவ் கூறியுள்ளார்.

இந்நிலையில் அணு உலை கட்டுமானத்தை முழுவதுமாக ரோபோக்களே மேற்கொள்ளும் எனவும் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் நிலவு மண்ணைப் பயன்படுத்தி ஒரு அடிப்படை நிலையத்தை நிறுவி, அதன் பின்னர் விரிவான கட்டுமானத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply