நீங்கள் கொன்றவர்களை நாங்கள் நினைவுகூற உங்களிடம் அனுமதி எடுக்க வேண்டுமா என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்விஎழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு, வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை கஜேந்திரன் தலைமையிலான அணியினர் சிரமதானப் பணிகளின் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதன் போது பொலிஸார், மற்றும் இராணுவத்தினரின் அங்கு பிரசன்னமாகினர். அதன் போதே கஜேந்திரன் எம்.பி மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். மேலும்,
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உயிரிழந்தவர்களை நினைவுகூற தடைவிதிக்கவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இறந்தவர்களை நாங்கள் நினைவுகூறுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை, நீங்கள் கொன்றவர்களை நாங்கள் நினைவுகூற உங்களிடம் அனுமதி எடுக்க வேண்டுமா? இதுவா உங்கள் ஜனநாயகம், என இராணுவத்தினரைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.