நீதிக்காக வாழும்வரைப்போராடு!

You are currently viewing நீதிக்காக வாழும்வரைப்போராடு!



போராடாத எந்த உயிரினமும்
வாழ்ந்ததாக
சரித்திரம் இல்லை!

எறும்பு கூட
அப்படித்தான் வாழ்கின்றது!
நாளாந்தம்
உணவுக்காக போராடுகின்றது!

ஆகவே

எனக்கு ஏற்பட்ட
காயத்திற்கு
மருந்து கட்ட
நான் சம்மதித்தால்
மட்டுமே
சீழ்பிடிக்காது
குணப்படுத்த முடியும்!

அலட்சியப்போக்கிலும்
அச்ச உணர்விலும்
காலமூச்சு கரையுமானால்
சாவு நெருங்குவதை
தவிர்க்கமுடியாது!
புளுக்கள் எங்களை
தின்பதையும் தடுக்கமுடியாது!
அழுக்குகளாய் கால்களில்
மிதிபடுவதையும்
நிறுத்தமுடியாது!

ஆகவே
மனிதா
சிந்தனை செய்
சீழ்வடிந்து சாகப்போகின்றோமா?
அல்லது
சீதளக்காற்றை
சுவாசிக்கப்போகின்றோமா?
சிந்தனை செய்
உன் கண்ணை குத்தி
நீயே உன்னைக்
குருடாக்காதே!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply