தென்னிலங்கைக்கு சென்று முல்லைத்தீவு நீதிபதியை காட்டிக்கொடுத்துவிட்டு தனது அரசியல் முகவரியை தக்கவைத்துக்கொள்ளவே மனிதச்சங்கிலி போராட்டத்தில் சி.வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
நீதிபதி சரவணராஜாவை சட்ட மா அதிபர் அழைத்து, அச்சுறுத்தியது மாத்திம் அல்லாமல் தீர்ப்பை மாற்றுமாறு அச்சுறுத்தல் கலந்த உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றார்.
இவற்றுக்கு அடி பணியாத காரணத்தினால் நீதிபதியின் பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கின்றது எனவும் சுகாஸ் கூறினார்.
குருந்தூர் மலை விவகாரத்தில் சரத் வீரசேகர அங்கு சென்று நீதிபதியோடு உரையாட முற்பட்டது சரியான விடயம் அல்ல. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிக்கு அவர் அச்சுறுத்தலையே விடுத்தார். ஆனால் பொலிஸார் சரத் வீரசேகரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்றும் சுகாஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில் நீதியரசர் முன்னாள் முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தானது முற்று முழுதாக பாதிக்கப்பட்டவரை காட்டிக்கொடுக்கும் செயற்பாடு என பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.