குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டு வரும் விகாரை நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி இடம்பெற்று வரும் கட்டுமானங்களை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
குருந்தூர் மலையில் மேலும் வேலைப்பாடுகள் நடைபெறுவதாக கிடைத்த தகவல்களையடுத்து திடீர் விஜயமொன்றினை தற்போது மேற்கொண்ட போது முற்றுமுழுதான ராணுவப்பிரசன்னத்துடன் குருந்தூர் மலையின்கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் காணப்பட்டதுடன் குருந்தூர்மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான கட்டில்களும் தீயில் சுடப்பட்டுக்கொண்டிருக்கின்ற குளத்துமீன்களும் ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் காணப்பட்டது. அங்கு சீருடையில் நின்ற ராணுவத்தினர் பலர் காட்டுக்குள் தம்மை மறைத்துக்கொண்டனர்.
கட்டுமானத்திற்கான வாளி போன்ற தடையங்கள் மேற்பகுதியில் காணப்பட்டது.
தண்ணிமுறிப்பு குளத்திற்குள் ராணுவத்தை தவிர வேறுயாரும் மீன்பிடிக்கவோ குளத்திற்குள் பிரவேசிக்கவோ முடியாத நிலையில் பெருவாரியான மீனினைப்பிடித்து கருவாடாக்கி தென்பகுதிக்கு கொண்டு செல்லுகின்ற செயற்பாடுகளும் ராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.