நீதி வென்றது! அநீதி தோற்றது!
போராடும் மக்களே வரலாறு படைப்பார்கள்!
ஒன்ராறியோவுக்கான மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று, செப்டம்பர் 5, 2024 (Bill 104) தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச், சட்டத்தை உறுதி செய்ததில் தமிழினமாக நாம் பெருமையும் பெரு மகிழ்ச்சியும் அடைகின்றோம்!.
ஒன்றாரியோஅரசிற்கும் நீதியை வெல்ல வைத்த சான்றோர்க்கும் அரும்பாடுபட்ட அனைவர்க்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!
தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சவால் நிராகரிக்கப்பட்டது! நீதி வென்றது! அநீதி தோற்றது!
மீண்டும் ஒருமுறை தடைகளை உடைத்து எங்கள் தமிழினம் வாகை சூடிய வரலாற்று பெரு வெற்றி இது!
இனி ஒன்டாரியோ மக்கள் தமிழ் இனப்படுகொலை குறித்து தொடர்ந்து கல்வி கற்றுக்கொள்ளவும் கற்பிக்கவும் பேசுபொருளாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இச் சட்டம் அனுமதிக்கிறது.
மசோதா 104 ஐப் பாதுகாக்க அயராது உழைத்த 60 க்கும் மேற்பட்ட தமிழ் பொது அமைப்புகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் குறிப்பாக எங்கள் அன்பு இளவல் விஜய் தணிகாசலம், மாநில சட்டமன்ற உறுப்பினர், றுஜ் பார்க், மற்றும் இவ்விடயத்தில் முன்னின்று அயராது உழைத்த அனைத்து எம் தமிழ் இளைஞர்களுக்கும் இனமானத் தமிழர்க்கும் தமிழினத்தின் நெஞ்சார்ந்த நன்றியைத்்தமிழினத்தின் சார்பில் நானும் தெரிவிக்கின்றேன் 🙏!
மசோதா 104 நிறைவேற்றப்பட்டமை ஒன்ராறியோவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும் நாளாக இந்நாளை மாற்றியுள்ளது!
இதை ஒரு ஆரம்பமாகக் கொண்டு மென் மேலும் பல வெற்றிகளைப் பெற்று இனி வரும் காலமும்
இனமானத் தமிழினம் ஒன்றுபட்ட சக்தியாக வரலாறுகள் பல படைத்து விடுதலை வரை வீச்சோடு உழைக்க வாழ்த்துக்கள்!
ஆண்ட தமிழினம் மீண்டும் மாண்டு போகாது!
மீண்டும் ஒரு நாள் தன் விடுதலைக்கான நீதியைப் இதுபோல் பெற்று எங்கள் மண்ணில் ஆள்வதும் உறுதி!
அதுவரை களங்கள் தோறும் விழ விழ எழுவோம் என்பதே இவ்வெற்றி உணர்த்தும் தத்துவப் பாடம் என உணர்கின்றேன்!
உங்கள் உணர்வுகளோடு
உங்களில் ஒருத்தி சிவவதனி