நீதி வேண்டி போராடும் சாவகச்சேரி வர்த்தகர்களை சந்தித்தார் கயேந்திரன்.

You are currently viewing நீதி வேண்டி போராடும் சாவகச்சேரி வர்த்தகர்களை சந்தித்தார் கயேந்திரன்.

நீதி வேண்டி போராடும் சாவகச்சேரி வர்த்தகர்களை சந்தித்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.

சாவகச்சேரியில் நகரசபையால் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதியை வாடகைக்கான கேள்வி பத்திரங்கள் நகரசபையின் செயலாளரால் கோரப்படும்போது இலங்கை பூராகவும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள் அதாவது சாவகச்சேரிநகர் வர்த்தகர்கள் 2000 ஆம் ஆண்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் நகரசபைக்கு வரி செலுத்தும் பகுதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் நாடு பூராவும் யாரும் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும் என்று நகரசபையின் செயலாளரின் அறிவிப்பனது போரால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறது.

நகரசபைக்குச் சொந்தமான கடைத்தொகுதி வாடகைக்கு கொடுக்கும் போது அந்த சபைக்கு வரிசெலுத்துவோருக்கு மண் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் அதேயிடத்தில் வியபாரம் செய்துவந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு போரால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோருவது முற்றிலும் நியாயமானதே .

பகிர்ந்துகொள்ள

Leave a Reply