இன்று திங்கள் பிற்பகல் தலைநகர் ஒஸ்லோவில் ஏற்பட்ட நீர்க் கசிவுக்குப் பின் குழாய்களில் பழுப்பு நிறத்தில் குடிநீர் வருவதாக ஒஸ்லோ நீர் மற்றும் கழிவு நீர் நிறுவனம் தனது இணையதளத்தில் கூறியுள்ளது.
இப்பொழுது ஓஸ்லோவில் ஒரு சிலருக்கு குழாய்களில் பழுப்பு நிறத்தில் குடிநீர் வரத்தொடங்கி விட்டதாகவும். இது ஆபத்தானது அல்ல, நீங்கள் அதைக் குடிப்பதற்கும், சமைப்பதற்க்கும் பாவிக்கலாம் ஆனால்.., வெள்ளை ஆடைகளை கழுவவேண்டாம் என்று ஒஸ்லோவில் உள்ள நீர் மற்றும் கழிவு நீர் நிர்வாகத்தின் தகவல் தொடர்பு ஆலோசகர் டோன் ஸ்பைலர்(Tone Spieler) VG பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
செவ்வாய் காலை வரை இது தொடரக்கூடும் என்று அவர் கூறினார். பழுப்புநிற குடிநீரை பெறுவோருக்காக ஒஸ்லோ நீர் மற்றும் கழிவு நீர் நிறுவன நிருவாகம் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது, அதை நீங்கள் இங்கே படிக்கலாம்.