நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் பிரான்ஸ் தலைநகரம்!

You are currently viewing நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் பிரான்ஸ் தலைநகரம்!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுவருகிறார்கள். வெளியேற்றப்பட்டு வருவோர் பெரும்பாலும் ஆண்கள். வீடில்லாமல், சாலையோரமாக, பாலங்களின் கீழ் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர், பாரீஸிலிருந்து வெளியேற்றப்பட்டு, பிரான்சில் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அவ்வகையில், வாரம் ஒன்றிற்கு 50 முதல் 150 பேர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இப்படி திடீரென புலம்பெயர்ந்தோர், அகதிகள், பாரீஸிலிருந்து வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதன் பின்னணியில் 2024 கோடையில், பாரீஸில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட இருப்பது காரணமா என்றால், அரசு அதிகாரிகள் அதை மறுக்கிறார்கள்.

ஆனால், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களும் இப்படி திடீரென புலம்பெயர்ந்தோர், அகதிகள் முதலானோர் பாரீஸிலிருந்து வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளும் ஒரு காரணம் என நம்புகிறார்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply