நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது!

You are currently viewing நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது!

முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 சகோதரர்களுக்கு இடையே பிரிவிடல் செய்யப்பட்ட வேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நேற்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

வெளிநாட்டில் வசிக்கும் மற்றைய சகோதரர் ஒருவர் பங்கு ஆதனம் சட்டத்துக்கு புறம்பாக மோசடியாக விற்பனை செய்துள்ளமையை அறிந்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியாக ஆதனத்தை உரிமம் மாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நல்லதம்பி சசிகரன் என்பவரை கைது செய்தனர்.

அவரது மோசடியாக முடிக்கப்பட்ட உறுதிக்கு சாட்சிக் கையொப்பமிட்ட முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஒருவரும் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments