நெதன்யாகுவின் வீடு மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேல் வழங்கிய பதிலடி!

You are currently viewing நெதன்யாகுவின் வீடு மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேல் வழங்கிய பதிலடி!

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலையடுத்து, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

முன்னதாக, நெதன்யாகுவின் வீடு, ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது.

எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எவ்வாறெனினும், ஹிஸ்புல்லா இதற்கு பெரிய விலையை கொடுக்க நேரிடும் என நெதன்யாகு நேற்றையதினம் (19.10.2024) தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இது கடந்த வாரத்தில் லெபனான் மீது பதிவான மிகப் பெரிய தாக்குதலாக கருதப்படுகின்றது.

மேலும், இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் அப்பகுதியிலுள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவித்த சில நிமிடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதன்யாகுவின் வீடு மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேல் வழங்கிய பதிலடி | Israel S Reply After Nethanyahu S House Attacked

 

தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், குறைந்தது ஒரு பல மாடி கட்டிடமாவது முற்றாக தகர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply