நெதர்லாந்தில், இம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும் பன்னாட்டு விசாரணை கோரியும் ( சர்வதேச நீதிமன்ற விசாரணை) தமிழ்ப்பெண்கள் அமைப்பு, இளையோர், நெதர்லாந்து தமிழர் அவை உட்பட நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் மக்கள் அதிகமாகக்கூடும் தொடரூந்து நிலையங்கள், அங்காடிகள் உட்பட பல பொது இடங்களில் டச், ஆங்கில மொழிகளில் இன அழிப்பை உறுதிப்படுத்திய ஆதாரங்களை வெளிப்படுத்தி பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மே18 ஞாயிறு அன்று, பிறநாட்டவர்களும் டச்மக்களும் அதிகமாகக்கூடும் பிரசித்திபெற்ற இடமான அம்சர்டாம், டாம் சதுக்கத்தில் டச், ஆங்கில மொழிகளில் தமிழின அழிப்பு நாளை வெளிப்படுத்தி, நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.


