நெதர்லாந்தில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர்கள் வணக்கநிகழ்வும் தியாகச்சுடர் அன்னை பூபதி நினைவுசுமந்த உள்ளரங்க விளையாட்டுப்போட்டிகளும்.
நெதர்லாந்துத் தமிழ்ப்பெண்கள் அமைப்பு, முதன்முறையாக பெண்கள், சிறுவர்களிற்கான உள்ளரங்கப்போட்டிகளை தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவாக, கடந்த 15-04-2023 சனியன்று “கில்வெசம்” பிரதேசத்தில் பெருந்திரளான தமிழ்மக்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக நடாத்தியிருந்தது. காலை 10மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில், முதலில் பொதுச்சுடரேற்றல், தேசியக்கொடியேற்றலுடன், அவ்வரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகச்சுடர் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படங்களிற்கு பெண்கள் அமைப்புச்செயற்பாட்டாளர்கள், இளையோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஈகைச்சுடர்களையும் மலர்வணக்கங்களையும் செலுத்தியபின், தியாகச்சுடர் அன்னை பூபதி நினைவுசுமந்த வெற்றிக்கிண்ணங்களிற்கான உள்ளரங்க விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. பெண்கள், சிறுவர்களிற்கான இப்போட்டிகளில் பெருமளவிலான பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டிருந்தனர். சிறுவர்களிற்கான பல விளையாட்டுகளும் பெண்களுக்கான பல விளையாட்டுப்போட்டிகளுடன் தாச்சி, பூப்பந்தாட்டப்போட்டிகள் சிறப்புப்போட்டிகளாக இடம்பெற்றிருந்தன. இதில் பூப்பந்தாட்டப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்க்கிண்ணத்துடன் சுழல்வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டன. அத்துடன் இங்கூ நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்களுடன் பங்குபற்றிய சிறுவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் பெண்கள் அமைப்பினராலும் இளையோர்களாலும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். இப்போட்டிகள் அனைத்தையும் இளையோர்கள் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி மிகவும் சிறப்பாக நடாத்தியிருந்தமை பாராட்டத்தக்கதாகும்.
இறுதியாக தமிழீழத்தேசியக்கொடியிறக்கலுடன் இவ்நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது
நன்றி.