நெதர்லாந்தில் 20-11-2022 ஞாயிறு எம் மண்ணின் விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களை ஈந்தளித்த அந்த மாவீரர்களின் உறவுகளை, உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு அல்மேரா பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 13.00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்து மாவீரர் குடும்பங்கள் தங்கள் உரித்துடையோர்களிற்கு ஈகைச்சுடரேற்ற தொடர்ந்து அகவணக்கம் மலர் வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து அனைத்துலகத் தொடர்பகத்தின் பொறுப்பாளர்களின் நினைவுரைகளும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வந்திருந்த மாவீரர் குடும்பத்தினர் தங்கள் உறவுகளின் நினைவுகளை மீட்டு அனைவருடனும் பகிர்ந்துகொண்டனர். உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந் நிகழ்வு இறுதியில் அனைவரும் தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.





