நெதர்லாந்தில் பாரிய வெடிப்பு- தகர்ந்து போன அடுக்குமாடிகள்.!

You are currently viewing நெதர்லாந்தில் பாரிய வெடிப்பு- தகர்ந்து போன அடுக்குமாடிகள்.!

நெதர்லாந்தின் ஹேக் நகரில் பாரிய குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் நேரப்படி 6.15 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

அதில் 3 மாடிகளைக் கொண்ட 5 அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகள் முற்றாக அழிந்து போயிருக்கின்றன.

இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும் 4 பேர் காயமடைந்தனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவ நேரம் அங்கு 20இற்கும் அதிகமானோர் இருந்தனர் என்றும் பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

எப்படி இந்த வெடிப்பு நிகழ்ந்தது என விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply