நெருங்கிய குடும்ப உறவுகளுக்கிடையிலான திருமண பந்தத்தை தடைசெய்யும் சட்டமூலத்துக்கு நோர்வே நாடாளுமன்றம் இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நோர்வே மக்களிடையே இந்த முறைமை இல்லாவிட்டாலும், நோர்வேயில் குடியேறி வாழும் பிறநாட்டவர்களிடையே, குறிப்பாக தென்னாசிய நாடுகளை சேர்ந்தவர்களிடையே இம்முறைமை இன்றும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
மச்சான் / மச்சாள் உறவுகளிடையேயும், ஒன்றுவிட்ட சகோதரன் / சகோதரி உறவுகளிடையேயும் திருமண பந்தங்கள் செய்துகொள்ளப்படுவதால் பிறக்கும் குழந்தைகள் உடற்குறைபாடுகளோடு பிறந்து, வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளாகவும், உடலியக்கமின்மையானவர்களாகவும் வாழும் நிலைக்கு தள்ளப்படுபவது நோர்வேயில் பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது.
கடந்த காலங்களில் இம்முறைமைக்கான தடைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, குறித்த முறைமையை கலாச்சாரமாகவே கொண்டுள்ள நாடுகளை ஆதாரமாக கொண்டு, நோர்வேயில் குடியேறி பல தலைமுறைகளாக வாழும் மக்களின் பலத்த எதிர்ப்புக்களால் அது கைகூடாதபோதும், தற்போதைய அரசு இன்று அதற்கான தடைக்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.