வடமராட்சி நெல்லியடி பகுதியில் இன்று (14) நண்பகல் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் வாயு சிலின்டர் பயன்படுத்தி பலூன்கள் மற்றும் காற்றடைக்கப்பட்ட பொம்மைகள் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இவ் நடைபாதை வியாபாரிகள் சுகாதாரப் பரிசோதகர்களால் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.
மேலும் பலூன் வியாபாரத்தின் போது அங்கு கூடிய மக்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.
நாட்டில் நிலவும் கோரோனா வைரஸ் பரவலையடுத்து நடைபாதை வியாபாரங்களுக்கும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறியமையாலேயே பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.