நேட்டோ அமைப்பின் அடுத்த பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் தெரிவு !

You are currently viewing நேட்டோ அமைப்பின் அடுத்த பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் தெரிவு !

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே (Mark Rutte) உலகின் மிகபபாரிய ராணுவ அமைப்பான நேட்டோவின் (NATO) பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேட்டோவின் பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டியில், அவர் ருமேனியாவின் பிரதமர் கிளாஸ் அயோஹானிஸை எதிர்த்துப் போட்டியிட்டார்.

ஆனால், கடந்த வாரம் கிளாஸ் தனது பெயரை வாபஸ் பெற்றார். அதன் பிறகு மார்க் ரூட் பொதுச்செயலாளராக வருவதற்கான பாதை தெளிவானது.

நெதர்லாந்து பிரதமராக மார்க் ரூட்டின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற பெரும் சவாலை NATO அமைப்பு எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் நேட்டோவின் பொதுச் செயலாளராகப் போகிறார்.

நேட்டோவின் பொதுச் செயலாளராக ரூட்டின் பதவிக்காலம் அக்டோபர் முதலாம் திகதி தொடங்குகிறது.

பதவி விலகும் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கிற்குப் (Jens Stoltenberg) பதிலாக ரூட் நியமிக்கப்படுவார். ஸ்டோல்டன்பெர்க்கின் 10 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பரில் முடிவடைகிறது.

புதன்கிழமை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க் ரூட்டுக்கு ஸ்டோல்டன்பெர்க் வாழ்த்து தெரிவித்தார்.

நேட்டோவில் பொதுச்செயலாளர் என்றால், ஒரு சர்வதேச சிவில் ஊழியர். நேட்டோவின் அனைத்து முக்கியமான குழுக்களின் தலைவர். அமைப்பின் முக்கிய முடிவுகளில் அவர் பங்கு வகிக்கிறார்.

இது தவிர, அமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும், சர்வதேச ஊழியர்களின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார்.

மார்க் ரூட் பொதுச்செயலாளராக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில், ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உரிய நேரத்தில் உதவி செய்வது அவரது முதல் சவால்.

இது தவிர, இந்த ராணுவ அமைப்பை பலப்படுத்துவதும் அவர்களுக்கு சவாலாக உள்ளது.

சமீப காலமாக நேட்டோ நாடுகளிடையே ஒருங்கிணைப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்க் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிப்பார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply