நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்ற வேண்டும்:இஸ்ரேல்

You are currently viewing நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்ற வேண்டும்:இஸ்ரேல்

நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் திங்களன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர். துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் மிரட்டல், மற்றும் அவரது ஆபத்தான வாக்கு வன்மம் ஆகியவை இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரை கோபம் கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

நேட்டோ உறுப்பு நாடுகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் தூதர ரீதியாக தொடர்பு கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் துருக்கியை கண்டிக்க வேண்டும் என்றும் நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்றவும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக லிபியா மற்றும் அசர்பைஜான் பிராந்தியம் மீது துருக்கி ராணுவம் நுழைந்தது போன்று இஸ்ரேலுக்குள் நுழையும் நிலை ஏற்படும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடும் மிரட்டல் விடுத்திருந்தார்.

நாம் மிக வலிமையுடன் இருந்தால் இஸ்ரேல் இதுபோன்ற மோசமான செயல்களை பாலஸ்தீன மக்களுக்கு செய்திருக்காது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ள எர்டோகன், லிபியா மற்றும் அசர்பைஜான் பிராந்தியம் மீது முன்னர் நமது ராணுவம் நுழைந்தது போன்று இஸ்ரேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதை நாம் செய்ய முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என குறிப்பிட்டுள்ள எர்டோகன், நாம் வலிமையடைந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply