நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 200ற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இதன்போது ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 112ஐ கடந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அதிகபட்சமாக காத்மண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 64 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர் மழையால் காத்மண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருவதாவும் பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.