மலையக தமிழ் எம்.பிக்கள் இருவர் தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நேற்றிரவு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் நேரலையாக பங்கேற்றிருந்த போதே, பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே கைகலப்பு ஏற்பட்டது.தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான இவர்களில், வேலுகுமார் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.