நைஜீரியாவில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் தொகை 38 ஆக உயர்வு!

You are currently viewing நைஜீரியாவில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் தொகை 38 ஆக உயர்வு!

நைஜீரியாவின் வடக்கு மாகாணமான கடுனாவில் சில கிராமங்களுக்குள் புகுந்து அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக கடுனா மாநில பாதுகாப்பு ஆணையர் சாமுவேல் அருவான் தெரிவித்துள்ளார்.

கிவா உள்ளூராட்சிப் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் சில நாட்களுக்கு முன்னர் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உடனடியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கடுனா மாநில பாதுகாப்பு ஆணையர் சாமுவேல் அருவான் குறிப்பிட்டார்.

சமீப காலமாக நைஜீரியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களும் ஆட்கடத்தலும் அதிகரித்து வருகிறது.

நைஜீரியாவின் வடக்கு மாகாணங்களில் வன்முறைகளை தடுக்க அதிக படைகளை அரசு அங்கு களமிறக்கியுள்ளது. எனினும் அங்கு ஆயுதக்குழுக்கள் தொடர்ந்தும் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply