நைஜீரியாவில் வெடித்த சண்டை: 113 பேர் பலி!

You are currently viewing நைஜீரியாவில் வெடித்த  சண்டை: 113 பேர் பலி!

நைஜீரியாவில் இரண்டு கும்பல்களுக்கு மத்தியில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள மன்ஷு கிராமத்தில் வசிக்கும் இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த கருத்து வேறுபாடானது கும்பல் சண்டையாக உருவானதை தொடர்ந்து இரு தரப்பினரும் கையில் கிடைத்த பொருள்களை ஆயுதங்களாக பயன்படுத்தி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் வன்முறையில் இருதரப்பு களையும் சேர்த்து 113 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

அத்துடன் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததுடன் நிலைமையை கட்டுப்படுத்த ராணுவத்தினரின் அனுமதியை கோரியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply