கொரோனா தடுப்பூசி உருவாக்க, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தோற்றநிலை (virtual) நன்கொடையாளர் மாநாட்டை ஏற்பாடு செய்யும் போது, நோர்வே பிரதமர் Erna Solberg (H) அதன் தலைவர்களில் ஒருவராக இருப்பார் என கூறப்பட்டுள்ளது.
இன்றைய திங்கள் இணைய மாநாடானது, பல வார நிதி திரட்டலின் தொடக்கத்தைக் குறிக்கும் அதேவேளை, இது 7.5 பில்லியன் டாலர்களை (NOK 85 பில்லியன்) திரட்டும் நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் சோதனைகளின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் விநியோகம் போன்றவற்றிற்கு திரட்டப்படும் பணம் பயன்படுத்தப்படும் .
“ஐரோப்பிய ஆணையம் ஒரு பெரிய, சர்வதேச மாநாட்டைத் தொடங்குகிறது என்பது மிகவும் ஆரோக்கியமானது. உலகளாவிய சுகாதார பிரச்சினைகளில் எங்களது நீண்டகால ஈடுபாட்டுடன், அத்தகைய மாநாட்டில் கலந்து கொள்ளும்படி கேட்கப்படும்போது நோர்வே கைகொடுப்பது இயல்பானது” என்று Erna Solberg ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.