நோர்வேயின் மேற்குப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம், மேற்குப்பகுதியின் “Måløy” என்ற இடத்திலிருந்து சுமார் 111 கிலோமீட்டர் தொலைவில், 3.9 என்ற அளவீட்டில் பதிவாகியுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் உணராதவகையில் சிறுசிறு நிலநடுக்கங்கள் நோர்வேயில் அவ்வப்போது பதியப்பட்டு வருவது வழமையானாலும், நேற்றைய நிலநடுக்கம் சற்று கடுமையாக இருந்ததை உணர முடிந்ததாக அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.