நோர்வேயின் பெருநகரங்களில் ஒன்றான “Stavanger” நகரத்தின் “Sola” விமானதிலையத்தின்உள்ளக வாகனத்தரிப்பிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பயணிகளுக்கான உள்ளக வாகனத்தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மின்சாரத்தில்இயங்கும் வாகனத்தில் ஏற்பட்ட தீ, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டருந்த ஏனைய வாகனங்களுக்கும்பரவியதில் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏனைய வாகனங்களில் பரவிய தீயினால் வாகனங்களின் எரிபொருள் தாங்கிகள் வெடித்து பெரும்தீ அங்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, தீவிபத்தினால் சேதமான உள்ளகவாகனத்தரிப்பிடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிகிறது.
கட்டடம் முழுவதும் சரியும் ஆபத்தான நிலை இருப்பதால் தீயணைப்பு வீரர்களைகட்டடத்தினுள்ளே அனுப்பி தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகதீயணைப்புப்படைகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தீவீபத்தினால் ஏற்பட்டுள்ள புகைமண்டலம் காரணமாக, விமானநிலயத்தில் விமானங்கள. தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விமானங்கள் யாவும் நாட்டின் ஏனைய விமானநிலையங்களுக்கு திசை திருப்பி விடப்படுவதோடு, விமானநிலையமும் மூடப்பட்டிருப்பதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
இத்தீவிபத்தில் கட்டடம் சேதமாகியுள்ளதோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 300 பயணிகளின் வாகனங்களும் நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.