நோர்வே மருத்துவமனைகளில் கொரோனா தோற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 20 க்கும் குறைவாகவுள்ளது.
VG யின் கணக்கெடுப்பின்படி இப்பொழுது, நோர்வே மருத்துவமனைகளில் கொரோனா தோற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 22 ஆக இருந்துள்ளது. இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது 3 பேர் குறைவாகும்.
மார்ச் 11 அன்று, நோர்வே மருத்துவமனைகளில் 14 பேர் கொரோனா தோற்றால் அனுமதிக்கப்பட்டிருந்தனர், மறுநாள் நோர்வே மூடப்பட்டபோது, அந்த எண்ணிக்கை 29 வரை உயர்ந்தது. அப்போதிலிருந்து, இதுவரை 20 க்கும் குறைவான நோயாளிகள் இருந்ததில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- அதேபோல், தீவிர சிகிட்ச்சைப் பிரிவில் இருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 2ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 3 ஆக இருந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது, ஒருவர் குறைவாகும்.
- மேலும் சுவாசக்கருவி பயன்பாட்டில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 2 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினமும் 2 ஆகவே இருந்துள்ளது. ஆகவே மாற்றம் எதுவுமில்லை.
- இன்று இதுவரை,எந்த இறப்பும் பதிவாகவில்லை. ஆகவே, இதுவரை நோர்வேயில் மொத்தம் 239 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்.
- மேலும், இன்று இதுவரை இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8576 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய (10.06) புள்ளிவிபரங்களின்படி, நோர்வேயில் இதுவரை 267,877 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.