ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று பிரபலமாக அறியப்பட்ட வெள்ளை நிற திமிங்கலம் ஐரோப்பிய நாடான நோர்வேயில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று செய்திகளில் வெளிவந்த ஹவால்டிமிர் (Hvaldimir) என்ற பெல்கா திமிங்கலம் நோர்வே நாட்டில் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 14 அடி நீளமும் 2,700 பவுண்டுகள் எடையும் கொண்ட இந்த திமிங்கலம் ஓகஸ்ட் 31ஆம் திகதி ஸ்டாவஞ்சருக்கு அருகிலுள்ள ரிசாவிகா விரிகுடாவில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த திமிங்கலம் முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் வடக்கு நோர்வேயில் உள்ள ஹேமர்ஃபெஸ்ட் அருகே காணப்பட்ட போது இதற்கு நார்வேயில் இருந்து ‘ஹ்வால்’ (hval) என்றும் ரஷ்யாவிலிருந்து வால்டிமிர் (Hvaldimir) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
அதன் கழுத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற லேபிளுடன், இது ரஷ்யாவின் உளவுத்துறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அது தங்கள் திமிங்கலம் அல்ல என்று ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. ஹவால்டிமிரின் பராமரிப்புக்குப் பொறுப்பான மரைன் மைண்டின் நிறுவனர் செபாஸ்டியன் ஸ்ட்ராண்ட், அதன் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறப்பதற்கு முன்பு ஹவால்டிமிர் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.