கலாச்சார அமைச்சர் அபிட் ராஜா(Abid Raja) மற்றும் சுகாதார அமைச்சர் பென்ட் ஹாய்(Bent Høie) ஆகியோர் சினிமாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்புக்கு முன்முயற்சி எடுத்துள்ளனர் என கலாச்சார அமைச்சகத்தினர் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்
கச்சேரி திரையரங்குகள் மற்றும் கலாச்சார இல்லங்கள் சினிமாக்கள் மற்றும் பிற கலாச்சார அரங்குகள் மற்றும் அமர்ந்த பார்வையாளர்களைக் கொண்ட வளாகங்களில் ஒரு மீட்டர் விதியைப் பற்றிய உரையாடல் நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கலாச்சாரத் துறையின் பொறுமையின்மையை நான் புரிந்துகொண்டு இந்த செய்தியை பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ள அவர் நானும் அரசாங்கமும் எங்களால் முடிந்தவரை ஒரு நியாயமான அடிப்படையில் முன்முயற்சிகளை எடுப்பதந்கு உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார் அதேவேளை நிகழ்வுகளில் நபர்களுக்கிடையேயான சமூக இடைவெளிகளின் தேவைகளிலிருந்து கூடுதல் விலக்குகளை வழங்குவது நியாயமானதா? என்று ஒரு புதிய மதிப்பீட்டை செய்ய நோர்வே சுகாதார இயக்குனரகத்தை தாங்கள் கேட்க இருப்பதாகவும் கலாச்சார அமைச்சர் அபிட் ராஜா தெரிவித்துள்ளார்.
உதவி சுகாதார இயக்குநர் எஸ்பென் ரோஸ்ட்ரப் நக்ஸ்டாட்(Espen Rostrup Nakstad) புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வாதாக இருக்கின்றார்எனவும் கூடுதலாக பல நிறுவனங்கள் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்குப் பிறகு நோர்வே சுகாதார இயக்குனரகம் தேசிய பொது சுகாதார நிறுவனம் இணைந்து நடைமுறைப்பிரச்சனைகளை மதிப்பீடு செய்து தற்போதைய தேவைகளை சரிசெய்ய முடிந்தால் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.