நோர்வேயில் கொரோனா : DRAMMEN நகரில் மீண்டும் புதிய கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing நோர்வேயில் கொரோனா : DRAMMEN நகரில் மீண்டும் புதிய கொரோனா மரணம்!

கொரோனா வைரஸின் விளைவாக டிராமனில் (Drammen) இது மூன்றாவது மரணம். இது வைரஸின் தீவிரத்தன்மையையும், தொற்றுக்கு எதிராக விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது என்று, நகராட்சி ஆலோசகர் John David Johannessen இன்று வெள்ளி நகராட்சியின் செய்தியாளர் கூட்டத்தில் Drammens Tidende பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இறந்தவர் 90 களில் உள்ள ஒரு பெண் என்றும், அவர் Konnerud பகுதியில் உள்ள Fredholt பராமரிப்பு மையத்தில் வசித்து வந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Drammen நகராட்சியில் வசிக்கும் ஆறு பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில், 118 பேருக்கு நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: Drammen Tidende

பகிர்ந்துகொள்ள