நோர்வேயில் சமூகநல கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing நோர்வேயில் சமூகநல கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பாதிப்பின் பின்விளைவாக, நோர்வேயில் அதிகளவானோர் பணியிடங்களிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாலும், வேலை இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாலும், நோவேயின் சமூகநல கொடுப்பனவுகளை கவனிக்கும் திணைக்களத்துக்கு ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் மாத்திரம் 45.000 புதிய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், நேற்றய தினமான 16.03.20 அன்று மாத்திரம் புதிதாக 24.900 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், இவை மிக அதிகமான தொகை எனவும் சமூகநல கொடுப்பனவு திணைக்களமான “NAV” தெரிவித்துள்ளது.

2009 இல் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார சரிவின்போதும், 2016 இல் ஏற்பட்ட எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியின் போதும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை விடவும், இப்போது “கொரோனா” பரவலின் பின்னதான அவசர நிலைகளின்கீழ் கிடைத்திருக்கக்கூடிய விண்ணப்பங்கள் அதிகமானவை எனவும் கூறப்படுகிறது.

அதிகளவிலான விண்ணப்பங்கள் நாளாந்தம் வந்து குவிகின்ற நிலையில், அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து பதில்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுமெனவும், பொதுமக்கள் அதை புரிந்துகொள்ள வேண்டுமெனவும் மேற்படி திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, இப்போதுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு, மக்களின் பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்யும் பொருட்டும், நோர்வேயின் உள்ளூர் பொருளாதார சரிவை கட்டுப்படுத்தும் பொருட்டும், நோர்வே அரசு 100 பில்லியன் குறோணர்களை ஒதுக்கீடு செய்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தி மேம்பாடு:

இறுதித்தகவல்களின்படி, இன்றைய நிலவரப்படி 84.000 பேர் வேலையிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள