நோர்வேவாழ் தமிழ் மக்களுக்கு,
1992 ஆம்; ஆண்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் உருவாக்கப்பட்ட அன்னை பூபதி
தமிழ்க்கலைக்கூடம், 2009 மே இல் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் ஊடாக புதிய நிருவாகம்
உருவாக்கப்பட்டது.
இச்சூழலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் இனங்காணப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட
அன்னை தலைமை நிருவாகி கடந்த 13 வருடங்களாக நிருவாக இணைப்பாளராக கடமையாற்றி
வருகிறார்.
இவரின் நிருவாகக்காலத்தில் தமிழ்ச்சமூக அமைப்புக்களுடன் தனது முறை தவறிய நிருவாக
அணுகுமுறைகளால் பிரிவினைகளை திட்டமிட்டு உருவாக்கியதோடு தமிழ்க்கல்வி,
சமூகமேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்றிய ஆளுமையுள்ள 30 இற்கும் மேற்பட்ட
சமூகசெயற்பாட்டாளர்கள் விலகிச்செல்லவதற்கும் காரணமாக இருந்துள்ளார்.
பல்வேறு துறைசார் ஆளுமையுள்ளவர்களை இணைத்து நிருவாக விரிவாக்கம் செய்வதற்கு இவர்
தொடர்ச்சியாக தடையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அடுத்த தலைமுறையினர் இவ்வமைப்புகளில்
தொண்டாற்ற முன்வருவதற்கு பின்னிற்கின்றனர்.
நிறுவன மேம்பாட்டிற்கும், அமைப்புகளுடனான சுமூகமான இணைந்த செயல்பாட்டிற்கும்,
இவருடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நேரடியாகவும், சமூக நலன்விரும்பிகளாலும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நல்லெண்ண முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
தமிழ்த்தேசிய சக்தியின் வழிகாட்டலிலும் பாதுகாப்பிலும் நோர்வேவாழ் சமூகசெயற்பாட்டளர்களின் தன்னலமற்ற உன்னத அர்ப்பணிப்பினாலும், பல தமிழ்ப்பற்றாளர்களினதும், பெற்றோர்களினதும் நிதிப்பங்களிப்பினாலும் உருவாக்கப்பட்ட இவ்வுன்னத நிறுவனம், இன்று ஒரு தனிமனிதனின் தன்னிச்சையான செயற்பாடுகளால் மேம்பாடின்றி சீரிழந்து செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
13 வருடங்களுக்கு மேலாக தனது நாற்காலியை விட்டு அகலாது தேசிய கட்டமைப்புகளுக்குள்ளும் செயற்பாட்டாளர்களுக்குள்ளும் பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்து வரும் தனிநபர் ஒருவர் பதவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பாலும் வலுயுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் குழுவாதங்களை உருவாக்கி சமூகத்தில் பிளவுகளை உருவாக்க முனைவதால் தொடர்ந்தும் அவர் இப்பதவியில் இருப்பது ஆரோக்கியமல்ல எனவே அவர் நேர்மையானவராக இருந்தால் தனது பதவியை துறந்து மற்றவர்களுக்கு வழிவிடவேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பு ..…………