நோர்வேயின் அரச தொடரூந்து திணைக்களமான “NSB” நிறுவனம் பகுதிபகுதியாகதனியார்மயப்படுத்தப்பட்டு வருகிறது. நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பலத்தஎதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், ஆளும் வலதுசாரி கூட்டரசாங்கம் தொடரூந்து சேவையை தனியார்மயமாக்கி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, பிரித்தானியாவின் “Go Ahead” என்ற தனியார் நிறுவனம்பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நோர்வேயின் தொடரூந்து வழித்தடங்களின் சேவைக்கட்டணம்அடுத்த வருடத்திலிருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
“Vy” என்ற பெயரில் இந்நிறுவனம் தொடரூந்து வழித்தடங்களைபொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து மிக அதிகமான சேவைத்தடங்கல் உணரப்பட்டதாகபொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ள நிலையிலும், கடந்த வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் 100 தொடரூந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், இப்போது கட்டண உயர்வு பற்றிய தனதுஅறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய தனியார் நிறுவனமான “Go Ahead” நிறுவனத்திற்கு பிரித்தானிய மக்களிடையேநற்பெயர் கிடையாத நிலையிலும் நோர்வேயின் தொடரூந்து வழித்தடங்களை இந்நிறுவனத்திற்குநோத்வே அரசு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.